×

பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது

 

சிவகங்கை, மே 5: சிவகங்கையில் மே 7ம் தேதி முதல் 11 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மே 7 முதல் 17ம் தேதி வரை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இசைப்பயிற்சி, ஓவியப்பயிற்சி, சதுரங்கப் பயிற்சி, திருக்குறள் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, ஆங்கில பேச்சு பயிற்சி, மண்பாண்ட கலை பயிற்சி மற்றும் கைவினை பயிற்சி போன்ற பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படும்.

நிகழ்ச்சியில், கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கூகுள் பார்ம் அல்லது https://shorturl.at/mxDJR என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8300195044 மற்றும் 9629645456 ஆகிய அலைபேசி எண்களில் சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District ,Collector ,Asha Ajith ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்